• Apr 16 2025

சல்மான்கானை வீட்டில் புகுந்து கொலை செய்வோம்..! காவல்துறை தீவிர விசாரணை..

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் மீது புதிய கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சல்மான் கானின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு செய்திருந்தார்கள் அதற்கு காரணமாக லாரன்ஸ் பிஷ்நோய் என்ற கேங்ஸ்டரின் பெயர் வெளியானது. இதனால் நடிகருக்கு Y+ பாதுகாப்பு அளிக்கப்பட்டு 11 காவலர்களும் கமாண்டோக்களும் 24 மணி நேரமும் அவரை பாதுகாத்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது வாட்சப்பில் சல்மான் கானுக்கு புதிய கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் "சல்மான் கானை வீட்டில் புகுந்து கொலை செய்வோம், அல்லது காரை பாம் வைத்து வெடிக்க வைப்போம்" என்ற அச்சுறுத்தல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனை அடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சல்மான் கானின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பரிந்துரைகள் பரிசீலனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சல்மான் கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த கொலை மிரட்டலுக்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Advertisement

Advertisement