• Jan 19 2025

மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படம் குறித்து சூப்பரான விமர்சனத்தைக் கொடுத்த பார்த்திபன்- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப்பின் நடிப்பில் நாளைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மெர்ரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் ஹிந்தியில் இந்தத் திரைப்படம் நாளைய தினம் வெளியாகவுள்ளது.இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கையிப்பின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்து விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


 தமிழராக இருந்தாலும் பாலிவுட்டில் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்திவரும் ஸ்ரீராம் ராகவன், இயக்கத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்பதால் இந்தப் படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கையிப்பின் கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மெர்ரி கிறிஸ்துமஸ் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதே கண்கள் என்ற படம் 60களில் வெளியானபோது, இந்தப் படத்தின் கிளைமேக்சை வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய பார்த்திபன், அப்படியான கோரிக்கை மெர்ரி கிறிஸ்துமஸில் நேற்று வைக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் லிப்ட் இடைவெளியிலும் லிப்ஸ் இடைவெளியிலும் இருவர் கண்களும் ஸ்கிரீன் ப்ளே எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே ஸ்கிரீனிலும் பிரில்லியன்ட் ஸ்கிரீன்ப்ளே இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். குறிப்பாக க்ளைமாக்சில் வார்த்தைகள் இன்றி பிஜிஎம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement