சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக ரூ.1,000 கோடி அளவிலான சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறை (ED) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக, விளம்பரங்களில் நடித்ததும், அந்த செயலியுடன் தொடர்புடையதாக கூறப்படும் குற்றப்பணத்தில் சொத்துகள் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சில விளையாட்டு மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களுக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.
அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, பாலிவுட் நடிகர் சோனு சூட், நடிகை நேஹா சர்மா, திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மிமி சக்ரவர்த்தி, வங்காள நடிகர் அங்குஷ் ஹஸ்ரா மற்றும் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் தாயாருக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ.7.93 கோடி மதிப்புள்ள சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு, சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்பட்டு, அந்த தொகை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. ஆரம்ப கட்ட விசாரணையில், அந்த செயலி பல்வேறு பிரபலங்களை விளம்பர முகங்களாக பயன்படுத்தி, மக்களை முதலீடு செய்ய ஊக்குவித்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Listen News!