• Jan 19 2025

பாக்கியாவின் கேன்டீனுக்கு வைக்கப்பட்ட சீல்! ஈஸ்வரியை பொலிஸ் பிடிக்குமென பயம்காட்டிய கோபி? இன்றைய எபிசோட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி கிரடிட் காட் பணம் கட்டாததால் கோபியை அழைத்து வாசலில் வைத்து பேங்க்ல இருந்து வந்து திட்டுகின்றனர். அந்த நேரத்தில் ராதிகாவும் வந்து, பேங்க்காரங்க தானே ஏன் வந்தாங்க என கேக்க, கிரடிட் காட் வாங்க சொல்லி வந்தாங்க. நான் தான் பெரிய பிசினஸ்மேன் என சொல்லி சமாளிக்கிறார்.

மறுபுறம் பாக்கியா, அமிர்தா, செல்வி ஆகியோர் கேன்டீன்க்கு வந்து கொண்டு இருக்கும் போது, இடையில் ஓடிவந்த ராஜீ, அங்க கேன்டீன்ல ஒரே ஆபிசரா இருக்காங்க.. உள்ள விடல என சொல்ல பாக்கியா பதற்றத்துடன் செல்கிறார்.


அங்கு பாக்கியாவின் கேன்டீனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தூரத்தில் இருந்து இருவர் பார்த்து சந்தோசப்படுகின்றனர். மேலும் பாக்கியாவை அசிங்கப்படுத்த மீடியாவையும் வர வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து ஆபிசரிடம் காரணத்தை பாக்கியா கேக்க, உணவு தரமல்ல ..கெட்டு போன சாப்பாட்டை மக்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டு வந்து இருக்கு எதுவா இருந்தாலும் ஆபிஸ்ல வந்து பேசுங்க என சொல்லிச் செல்ல, அங்குவந்த மீடியா ஆட்களும் நடந்தவற்றை டிவியில் ஒளிபரப்புகின்றனர்.


இதையடுத்து, செழியனுக்கு அவரது நண்பர் கால் பண்ணி, உங்க அம்மாட கேன்டீனுக்கு சீல் வச்சிட்டாங்க.. நியூஸ் பாக்கலையை என சொல்லுகிறார். செழியனும் நியூஸ் பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின் தாத்தாவை கூட்டிக் கொண்டு பாக்கியாவை பார்க்க செல்ல, கோபியும் ஈஸ்வரியும் இருந்து புலம்பிக் கொண்டு உள்ளார்கள். கோபியும் உங்க பெயர தான் வச்சு இருக்கா, பொலிஸ், ஜெயில் என போகணும் என்று ஈஸ்வரியை பயம் காட்டுகிறார். மேலும் பாக்கியாவுக்கு நல்லா வேணும், இனி எதுவுமே செய்யாம இருக்கனும் என கோபி சொல்லிக் கொள்கிறார்.

இன்னொரு பக்கம், பழனியும், எழிலும் கேன்டீனை சீல் வைத்த ஆபிஸ்க்கு சென்று யார் கம்பிளைன்ட் கொடுத்து என விசாரிக்க, பாக்கியாவோடு பிரச்சனை செய்த கோதண்டராமன் என தெரியவருகிறது. எனினும் அவர்களுக்கு ஞாபகம் வரவில்லை. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement