• Jan 08 2025

OMG வச்சான் பாரு ஆப்பு. வைல்ட் கார்ட் நாக் அவுட்.?? இறங்கி அடிக்க தயாராகும் போட்டியாளர்கள்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் தற்போது பைனலுக்கான போட்டியில் 8 போட்டியாளர்கள் தான் தான் காணப்படுகின்றார்கள். இதன் காரணத்தினால் பிக்பாஸ் இல்லம் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டின் 92 ஆவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் கொடுத்த அறிவித்தலை கேட்டு ஹவுஸ்மேட்ஸ்  அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

d_i_a

அதன்படி பிக் பாஸ் கொடுத்த அறிவித்தலில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வர உள்ளார்கள். இதனால் உங்களுக்காக வைல்ட் கார்ட் நாக் அவுட்.. எக்ஸ் போட்டியாளர்கள் உங்க கூட சக போட்டியாளராக மீண்டும் வரப்போறாங்க.


இந்த போட்டியின் இறுதியில் இரண்டு போட்டியார்கள் ரீபிளேஸ் செய்யப்படலாம். யாரு யாரை நாக் அவுட் பண்ணுறாங்க என்பதை பார்ப்போம் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

இதை கேட்ட போட்டியார்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, என்னடா இது முதல்ல இருந்தா என ஜாக்குலின் கேட்கிறார். அதற்கு முத்து 16 நாளும் எவ்ளவு இறங்கி அடிக்க ஏலுமோ அவ்வளவு செஞ்சிடலாம் என  சொல்லுகிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement