• Jan 08 2025

விஜய் மசாலா படத்தில் நடிக்கிறாரா? பையனூர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளியான சீக்ரெட்.!

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் விஜய் நடிப்பில் இறுதியாக கோட் படம் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது தளபதி 69 ஆவது படத்தை எச். வினோத் இயக்கி வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக இடம் பெற்று வருகின்றன.

தளபதி 69 ஆவது படத்தில்  விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, மமீதா பைஜூ, பாபி தியோல் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இதனால் இந்த படம் மீதான  எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகின்றது.

d_i_a

தளபதி 69 ஆவது படம் பற்றிய தகவல்கள் கசிந்த போது தெலுங்கில் அனில் விப்புடி இயக்கத்தில் பாலையா நடித்த ‘பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான் 'தளபதி 69' என்று கூறப்பட்டது. ஆனாலும் தளபதி நடிக்கும் இறுதிப் படம் என்பதால் இந்த படம் ரீமேக்காக இருக்காது எனவும் பலரும் கருதுகின்றார்கள்.


இதை தொடர்ந்து தளபதி 69 வது படத்தின் படக்குழுவினர் ‘பகவந்த் கேசரி' படத்தின் உரிமையை வாங்கி இருப்பது உண்மைதான் என்ற தகவல் வெளியானது' ஆனால் அந்த படத்தின் கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' காட்சிகளிலும் எந்தவித சட்ட சிக்கலும் இருக்கக் கூடாது என்பதில் படக்குழுவினர் தெளிவாக காணப்பட்டனர்.

இந்த நிலையில், தளபதி 69 ஆவது படம் தெலுங்கில் பாலையா நடித்த ‘பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் தான் என்றும் இது தொடர்பான மேலதிக தகவல்களையும் வழங்கியுள்ளனர் வலைபேச்சு தரப்பினர்.


அதன்படி அவர்கள் கூறுகையில், விஜய் இறுதியாக ஒரு மசாலா படத்தில் நடித்துவிட்டு போகலாம் என்று நினைத்துள்ளார் போல. அவர் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கில் தான் நடிக்க உள்ளார்.


தற்போது பையனூரில் நடக்கும் ஷூட்டிங்கை பார்க்கும் போது அப்படியே பகவந்த் கேசரி படத்தில் நடந்த சீன் தான் நடைபெறுகிறது. அந்த படத்தில் ஸ்ரீ லீலாவை கடத்தும் போது பாலையா அவரை காப்பாற்ற லொறியில் செல்லுவார்.

அதே போல இந்த படத்தில் மமீதாவை வில்லன் கோஷ்டி கடத்தி செல்லும் போது, காருக்கு பதிலாக பைக்கில் செல்லுகிறார் விஜய். இது தான் வித்தியாசம். விஜய் இறுதியாக ஒரு மசாலா படத்தில் நடித்து விட்டு போக உள்ளார் என குறிப்பிட்டு உள்ளார்கள்.

Advertisement

Advertisement