தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் விமர்சனங்களும் சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது என்றும் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களும் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் வெளியான ’இந்தியன் 2’ படம் போல் அல்லாமல் இந்த படத்தின் ஓபனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய முதல் நாளில் ‘ராயன்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 12 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் 5 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 2 கோடி, கேரளாவில் 50 லட்சம், கர்நாடகாவில் 2 கோடி மற்றும் வட இந்தியாவில் 50 லட்சம் என மொத்தம் கிட்டத்தட்ட முதல் நாளில் 22 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை 100 கோடி ரூபாய் செலவு செய்து தயாரித்திருப்பதாக கூறப்படும் நிலையில் முதல் நாளில் 22 கோடி வசூல் செய்துள்ளதால் அடுத்தடுத்த நாட்களில் பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக வசூல் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் 22 கோடி ரூபாய் வசூல் என்பது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வசூல் குறித்த தகவலை வெளியிட்டால் மட்டுமே அது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ராயன்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஒரு சிலர் 25 கோடி என்றும் 28 கோடி என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதால் உண்மையில் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தெளிவாக கூற வேண்டும் என்பதே தனுசு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Listen News!