• Mar 27 2023

இந்த வருஷம் எதிர்நீச்சல் சீரியல் மதுமிதாவுக்கு திருமணமா?- அவரே சொன்ன ரகசியத் தகவல்- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


 சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா, பிரபல சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில், எதிர்நீச்சல் தொடர் குறித்து பல விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அதே போல, குறிப்பாக நடிகர் மாரிமுத்து, எதிர்நீச்சல் தொடரில் வரும் குணசேகர் தொடர் மூலம் மக்கள் மத்தியில் வைரல் ஆகி வருவது குறித்தும் அவருடனான நட்பு குறித்தும் பல விஷயங்களையும் மனம் திறந்து பேசி இருந்தார்


இந்த நிலையில், தனது திருமணம் குறித்து மதுமிதா பேசிய விஷயங்களும் அதிக கவனம் பெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டு நடிகை மதுமிதா திருமணம் செய்து கொள்ளப் போவது பற்றி இன்ஸ்டாகிராமில் வைரல் ஆன விஷயத்தை கேள்வியாக எழுப்ப, இதற்கு பதில் சொன்ன நடிகை மதுமிதா, "அது நான் ரீல் பண்ணது வேற, அவங்க நெனச்சது வேற. 2023 ல கல்யாணம் ஆகும்ன்னு சொல்லி இருக்காங்க. 


நான் சிங்கிளா இருக்கேன், எங்கடா கல்யாணம் ஆகும்ன்னு சொல்லி இருந்தேன், அவ்ளோதான்.இன்னும் இல்லைங்க, நான் இப்பவும் குழந்தை. இப்போ வேணாம். இன்னும் நிறைய டைம் இருக்கு" என தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement