• Jan 18 2025

பேரனை புகழ்ந்து தள்ளிய தாத்தா, "குடும்ப சொத்தா தமிழ் சினிமா ?" - நெட்டிசன்கள் கேள்வி.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். விஜயகுமாரின் திரைவாழ்வின் அடுத்த பலனாக அவரது மகன் மற்றும் மகள்களும் தமிழ் சினிமாவில் நுழைந்து அவரவர் திறமைக்கேற்ப தொடர்ந்தும் நீடித்தனர்.

Veteran Actor Vijayakumar's Daughters ...

இவ்வாறிருக்க வனிதா விஜகுமாரின் மகன் விஜய் ஸ்ரீஹரி தனது அறிமுக படத்தில் நடித்து , குறித்த படமானது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.அவரது முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியிருப்பது அவருக்கான மேலுமொரு பலத்தை கொடுத்திருக்குறது.


'மாம்போ' என பெயரிடப்பட்டிருக்கும் இப் படமே உண்மையான சிங்கத்தை வைத்து படமாக்கபட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற படத்தின் பெஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய விஜயகுமார் நெகிழ்ச்சியாக பல தகவல்களை பகிர்ந்திருந்தார்.

Mambo First Look Launch | Prabhu Solomon D.Imman Vanitha Vijayakumar Son -  YouTube

குறித்த விழாவில் பேரனை பற்றி கூறிய விஜயகுமார் "அவர் இளம் வயதிலேயே வாழ்க்கை என்றால் என்ன, எப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று மிக அழகாக கற்றுக்கொண்டவர்." என குறிப்பிடத்தோடு அவரது படிப்பு மற்றும் திரைத்துறை பயணம் பற்றி கூறி பெருமிதம் கொண்டார்.இவ்வாறிருக்க தமிழ் சினிமா உங்கள் குடும்ப சொத்தா ? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். 

Advertisement

Advertisement