• Oct 08 2024

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷுக்கு சூனியம் வைத்த பெண்! போலீசில் பரபரப்பு புகார்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் கடந்த சில வருடங்களாகவே டிஆர்பி ரேட்டிங்கில் பின் தங்கிய நிலையில் காணப்பட்டது. ஆனால் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியாவுக்கும் கோபிக்கும் இடையே ஃபுட் காம்பெடிஷன் நடைபெற, இடையில் நடந்த இனியாவின் பிரச்சனையால் பாக்கியாவும் ஈஸ்வரியும் போட்டியை விட்டு வெளியேறுகின்றார்கள்.

இதன் காரணத்தினால் செல்வி தனியாக நின்று சமாளிக்க முடியாமல் கோபி தான் போட்டியில் வெற்றி பெறுகிறார். இனியா செய்த காரியத்தால் தான் மொத்தமாக தோற்றுப் போய் விட்டதாக பாக்கியா அழுது புலம்புகின்றார்.

இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகர் சதீஷ். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.


இந்த நிலையில், தான் செல்பி எடுக்க மறுத்ததால் குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம் காட்டி செய்வினை செய்து விடுவேன் என பெண் ஒருவர்  தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார் சதீஷ்குமார். தற்போது இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சென்னை திருவான்மையூரில் வசித்து வருகின்றார் சதீஷ். கடந்த ஆண்டு ஆறுபடை முருகன் கோயிலுக்கு சென்றபோது அங்கு சதீஷ் உடன் புகைப்படம் எடுக்க ஒரு பெண்மணி விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சதீஷ் புகைப்படம் எடுக்க மறுத்ததால் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அத்தோடு வீட்டு வாசலில் சூனியம் வைத்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருவதால் தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார் சதீஷ்.


Advertisement