• Jan 18 2025

கடைக்கு வந்து பாண்டியனை உலுக்கி எடுத்த கோமதி.. இனியாவது திருந்துவாரா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு கோமதி வருகை தருகிறார். அவரைப் பார்த்து ஆச்சரியமடைந்த பாண்டியன், ’எதற்காக நீ கடைக்கு வந்திருக்கிறாய்’ என்று கேட்க ’தங்கமயில் மட்டும் வரலாம், நான் வரக்கூடாதா’ என்று கூறுகிறார்.

’தங்கமயில் சாப்பாடு கொண்டு வருவார், கடையில் வியாபாரம் பார்ப்பார், உன்னால் வியாபாரம் பார்க்க முடியுமா’ என்று பாண்டியன் கூற ’நானும் வியாபாரம் பார்க்கிறேன்’ என்று களத்தில் இறங்கும் கோமதி, ஒரு கஸ்டமர் வரும்போது அவர் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுக்க திணறுகிறார். அதை பார்த்து பாண்டியன் கேலியுடன் சிரிக்கிறார்.

அதன் பிறகு ’கடைக்கு நீ காரணம் இல்லாமல் வர மாட்டாயே, என்ன விஷயம்’ என்று கேட்க, அப்போது கோமதி, ‘நீங்கள் ஏன் மூன்று பிள்ளைகளையும் சரிசமமாக நடத்த மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்? சரவணனை மட்டும் பாராட்டுகிறீர்கள், அது தவறு என்று சொல்லவில்லை, ஆனால் செந்தில், கதிர் ஆகிய இருவரையும் ஏன் திட்டிக் கொண்டே இருக்கிறீர்கள்’ என்று கேட்கிறார்.

’சரவணன் என் பேச்சை கேட்கிறான், அதனால் அவனை நான் பாராட்டுகிறேன், மற்ற இருவரும் என் பேச்சைக் கேட்பதில்லை’ என்று சொல்ல ’அப்படி என்ன உங்கள் பேச்சைக் கேட்கவில்லை, இருவரும்  உங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்கள், அதை தவிர உங்கள் பேச்சை அவர்கள் தட்டுவது இல்லையே, செந்தில், கதிர் இருவரும் நல்லவர்கள், அதனால் தான் அமைதியாக இருக்கிறார்கள், வேறு ஒரு பிள்ளையாக இருந்தால் இந்நேரம் பிரிந்து போய் இருப்பார்கள், அவர்கள் இருவரும் கட்டிட்டு வந்த மருமகள்களும் நல்ல முறையில் தானே நம் வீட்டில் அனுசரித்து இருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது நீங்கள் ஏன் சரிசமமாக அனைவரையும் நடத்தாமல் பாகுபாடாக நடத்துகிறீர்கள், இப்படியே போனால் குடும்பம் பிரியும் ஆபத்து இருக்கிறது’ என்று நான் பாண்டியனுக்கு உரைக்கும் வகையில் கூறுகிறார்.

பாண்டியனுக்கு அது உள்ளுக்குள் புரிந்து கொண்டாலும், வெளியே அதை காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். அதன் பிறகு கோமதி கடையிலிருந்து செல்கிறார். இந்த உரையாடலை மறைந்திருந்த கேட்ட செந்தில், கதிரிடம் கூறுகிறார். ’அம்மா ரொம்ப பாவம், நமக்காக பரிந்து பேசுகிறார்கள்’ என்று சொல்லி அதன் பின் ’நீ ஏன் அம்மாவிடம் பேச மாட்டேன் என்கிறாய், நியாயப்படி நீ திருமணம் செய்து கொண்டதற்கு அம்மா தான் உன்னிடம் கோபிக்க வேண்டும், அப்படி இருக்கும்போது அம்மாவிடம் நீ ஏன் கோபமாக இருக்கிறாய்’ என்று கேட்க ’அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று கதிர் சமாளிக்க அதன் பிறகு செந்தில் ஒரு கூர்மையான பார்வை பார்க்க, கதிர் தலை குனிந்து நிற்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement