• Jan 19 2025

இன்னும் 10 பைசாவுக்கு வியாபாரம் ஆகல..! இந்தியன் 2 பற்றி பார்த்திபன் பேட்டி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் தான் பார்த்திபன். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் டீன்ஸ். இந்த படத்திற்கு தற்போது நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

பார்த்திபன் இயக்கத்தில் இறுதியாக இரவு நிழல் படமும் நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்போது குழந்தைகளை வைத்து டீன்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் உலக நாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தோடு ரிலீஸ் ஆனது. இதற்கு தற்போது நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்ற நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி வழங்கியுள்ளார் பார்த்திபன்.

இதன் போது இந்திய திரைப்படம் ஓடாது என்பதால் தான் டீன்ஸ் படத்தை அதே திகதியில் வெளியிட்டீர்களா என ஒருவர் கேட்க, அதற்கு சிரித்த பார்த்திபன். நான் சிரித்தாலும் நக்கலாக சிரித்தார் என்று தான் செய்தியில் போடுவீர்கள். இந்தியன் 2 படம் பார்த்தவர்கள் சூப்பராக இருக்கிறது என்று சொல்லி இருந்தால் நான் நேற்று இரவே படத்தை பார்த்து இருப்பேன். ஒரு படம் திரைக்கு வந்தது என்றால் அதன் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அதில் மாறுபட்ட கருத்து இல்லை.


இந்திய 2 படம் வெளியாகும் அதே தேதியில் என்னுடைய படத்தை வெளியிட வேண்டாம் தியேட்டர்கள் கிடைக்காது என்று சொன்னார்கள். இதை எல்லாம் தாண்டி எனக்கு படத்தின் மீது இருந்த நம்பிக்கையால் படத்தை துணிந்து வெளியிட  முடிவு செய்தேன்.

எனது படம் இந்தியன் படம் போல ஊழல் பற்றிய கதை இல்லை. அதனால் என் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அது மட்டும் இல்லாமல் என் படம் இன்னும் பத்து பைசாவுக்கு கூட வியாபாரம் ஆகவில்லை. ஓடிடி செட்டிலைட்ஸிடம் உண்மையில் என் படம் நன்றாக இருந்தது என்றால் படம் தியேட்டரில் வெளியான பிறகு பார்த்துவிட்டு வாங்குங்கள் என்று சொன்னேன் இவ்வாறு தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

Advertisement

Advertisement