• Apr 28 2024

சமந்தா தவற விட்டதால் நயன்தாரா நடித்து வெற்றி பெற்ற திரைப்படம்- அடடே இந்தத் திரைப்படமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சகுந்தலம்.வருகிற 14ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேளைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் இவர் ப்ரமோஷன் பணியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.சகுந்தலம் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.


மேலும் சமந்தா இப்படங்களை எல்லாம் முடித்த பிறகு சில காலம் சினிமாவில் இருந்து பிரக் எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலேயே இந்த முடிவை எடுத்திருக்கின்றார்.


மேலும் சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் திரைப்படங்களை தவறவிட்டு இருக்கிறார்.அப்படி சமந்தா தவறவிட்ட படங்களில் ஒன்று தான் மாயா. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இன்று வரை நயன்தாரா திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் மாயாவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.










Advertisement

Advertisement

Advertisement