• Feb 26 2024

கார்த்தி படத்துக்கு நோ சொன்ன நயன்தாரா..ஓ..இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகை நயன்தாரா அடுத்தடுத்த சிறப்பான வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு  கொடுத்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் இவரது படங்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.

இவர்  லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இதன்மூலம் பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார் நயன்தாரா. சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் இவருக்கு திருமணம் மிகப்பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது.

நயன்தாராவின் திருமணம் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.எனினும்  சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு இந்த ஜோடி பெற்றோராக மாறியுள்ளது. இதனிடையே இவரது நடிப்பில் நாளை கோல்ட் படம் ரிலீசாகவுள்ளது. தமிழிலும் கோல்ட் படம் ரிலீசாகவுள்ளது. பிரபல மலையாளப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அத்தோடு இந்தப் படத்தை தொடர்ந்து கனெக்ட், நயன்தாரா 75, இறைவன் ஆகியப் படங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. மற்ற நடிகர், நடிகைகளை போலவே இவரும் தன்னுடைய சினிமா கேரியரில் சிறப்பான பல சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டுள்ளார். மேலும் அதில் கார்த்தி நடிப்பில் வெற்றி பெற்ற பையா படமும் ஒன்று.

கார்த்தியுடன் பையா படத்தில் ஜோடி சேர்ந்திருந்தார் தமன்னா.அத்தோடு  லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம், காதல் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் நடிக்க முதலில் லிங்குசாமி நயன்தாராவைத்தான் தேர்வு செய்திருந்தாராம். நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சம்பள விவகாரம் காரணமாக இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவிற்கு கிடைக்காமல் போயுள்ளதாம்.

எனினும் இதுகுறித்து இயக்குநர் லிங்குசாமி சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார். கார்த்தியுடன் இந்தப் படத்தில் வாய்ப்பு தவறினாலும் காஷ்மோரா படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார் நயன்தாரா. அந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த ஜோடி நடித்திருந்தாலும் சிறப்பான ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement