• Aug 05 2025

அல்லு அர்ஜுனுக்கு தொடர்ந்தும் ஏமாற்றம்..? புஷ்பா 2 க்கு அடுத்த வருடம் தான் விடிவா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல டோலிவுட் தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் மகனான அல்லு அர்ஜுன், பல வெற்றிப் படங்களை கொடுத்து தெலுங்கு திரை உலகின் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இருந்தது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

இதன் வெற்றியை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் சுகுமார் எடுத்து வருகின்றார். இந்த வருடம் டிசம்பர் 6ஆம் ஆண்டு புஷ்பா 2 படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இறுதி கட்டப்பட படிப்பில் பெரும் சிக்கல் உள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில் அல்லு அர்ஜுனுக்கும் இயக்குனர் சுகுமாருக்கு இடையே ஈகோ சண்டை வெடித்துள்ளதாக தெலுங்கு துறையில் பரபரப்பாக பேசப்பட்டது.


இவ்வாறான காரணத்தினால் புஷ்பா 2 வெளி வருமா? வராதா? என்ற கேள்விகளும் கிளம்பின. எனினும் இந்த படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனாவின் சிறப்பு போஸ்டர்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement