• May 20 2024

முத்தம் கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2015இல் இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி தற்போது 7 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.

அத்தோடு சமீபத்தில் வெளிவந்த விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் வருகிற ஜூன் 19ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இன்று அன்னையர் தினம் என்பதினால் விக்னேஷ் சிவன் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இதில், தனது வருங்கால மாமியாருக்கு நடிகை நயன்தாரா முத்தம் கொடுத்துள்ள அழகிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...

Advertisement

Advertisement