• Sep 21 2024

நயன்தாராவின் உடலில் இருக்கும் ஸ்பெஷல் -விக்கி வெளியிட்ட புகைப்படம்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியா குரியன்.

2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் திரையுலகில் ஐயா திரைப்படமே இவருக்கு ஹிட் கொடுத்தது.

அதை தொடர்ந்து தமிழ் திரையுலகில் சந்திரமுகி,சிவகாசி,கஜினி,கள்வனின் காதலி,வல்லவன்,தலைமகன்,ஈ,சிவாஜி,பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா.

பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த நயன்தாரா 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதையும் பெற்றார்.

2013,2015,2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்று பல விருதுகளை தன்வசம் வைத்துக்கொண்டார்.

இவ்வாறுஇருக்கையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இவர்களுக்கு காதல் ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்ட முறையில் பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற நிலையில் இவர்களின் திருமண புகைப்படத்தை முதன் முதலில் விக்னேஷ்வரன் வெளியிட்டார்.அது ரசிகர்களிடத்தே வைரலானது.

இவ்வாறு இருக்கையில் இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில் விக்கி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதில் நயனின் புகைப்படத்தில் இருக்கும் விடயம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.அது என்னவென்றால் நயனிற்கு ஒரு கையில் 6விரல்கள் இருக்கின்றதாம்.இதைப் பார்த்த ரசிகர்கள் நயனிற்கு 6விரல்களா..? என சொக்கி போயுள்ளார்களாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement