• May 22 2024

மார்போடு கட்டியணைத்து கண்ணோடு கண் பேசும் நயன்- விக்கியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மேலும் இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியிலுள்ள நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்றது.

மேலும் அதில் ரஜினி, ஷாருக் கான், விஜய் சேதுபதி. அனிருத், சூர்யா உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

திருமண வீடியோ உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும், திருமணத்திற்கான செலவை அந்த நிறுவனம் தான் செய்தது என்றும் செய்தி வந்தது.

திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து விக்னேஷ் சிவன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட தொடங்கினார். அதனால் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குகிறது, விக்கி - நயனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள் எனவும் நேற்று செய்தி பரவியது.

இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக தற்போது நெட்பிலிக்ஸ் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறது. விக்கி - நயன்தாரா புகைப்படங்களை பதிவிட்டு திருமண வீடியோ தங்களிடம் தான் வர போகிறது என குறிப்பிட்டு இருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement