• May 01 2024

நீல நிற உடையில் ரசிகர்களை மிரள வைத்த ஜான்வி…வெளியாகிய உச்ச கட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவரே நடிகை ஸ்ரீதேவி. "அம்மாவிற்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை மகள்" என்பதை போல் இவரின் மகளான ஜான்வி கபூரும் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது நாயகியாக ஜொலித்து வருகின்றார்.

தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற ஜான்வி கபூர் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிப்படமாக மாறி இருந்த "கோலமாவு கோகிலா" என்ற படத்தின் ரீமேக்கான 'குட் லக் ஜெரி' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் மிக விரைவில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இவர் எப்போதுமே காதல் கதைகளை விட தன்னுடைய கதாபாத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்ந்தெடுத்து நடிப்பார். இவ்வாறு அம்மாவைப் போன்று படங்களில் ரசனை கொண்டு ஓய்வில்லாமல் நடித்து வருகின்ற ஜான்வி கபூர் போட்டோ ஷூட் நடத்துவதிலும், விடீயோக்களை வெளியிடுவதில் அதிகளவில் ஆர்வம் கொண்டவர்.

இவரின் கவர்ச்சியான புகைப்படத்தினை ரசிப்பதற்கு என்றே இவருக்கு இன்ஸ்டாகிராமில் 16 மில்லியனுக்கு அதிகமான பாலோவேர்ஸ் இருக்காங்க என்றால் பாருங்களன். இவர் எந்தப் புகைப்படத்தை வெளியிட்டாலும் அந்தப் புகைப்படம் உடனே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விடும்.

இதே போன்றே இவர் சமீபத்தில் மும்பை பொது வெளியில் நீல நிற ட்ராப் லெஸ் உடையில் தோன்றி உச்ச கட்ட கவர்ச்சியால் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். அதுமட்டுமன்றி அதே நீல நிற உடை அணிந்து தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டும் இருக்கின்றார். இதில் இவரது கவர்ச்சி அழகு கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகின்றது. இதைப் பார்த்த ஜான்வி கபூரின் ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைத் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement