• Oct 16 2024

புஷ்பா படத்துக்கு எதுக்கு தேசிய விருது.."அந்த கேரக்டருக்கு என்ன தகுதி இருக்கு?-அல்லு அர்ஜுன் விருது பெற்றதால் கொந்தளிக்கும் பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

69வது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. தமிழ் திரையுலகிற்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை 'புஷ்பா' படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வென்றுள்ளார். 

நடிகை ஆலியா பட் 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கும், நடிகை கீர்த்தி சனோன் 'மிமி' படத்திற்காகவும் சிறந்த நடிகைக்காக தேசிய விருதை பெற்றுள்ளனர்.மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'கடைசி விவசாயி' படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்திற்காக சிறந்த பாடகிக்கான விருதை ஸ்ரேயா கோஷல் பெற்றுள்ளார்.


மேலும் அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றதால் புஷ்பா படத்தின் இயக்குநர் அவரை நேரில் சென்று வாழ்த்தியதோடு கண்ணீர் விட்டு அழும் வீடியோ எல்லாம் வைரலாகிகிருந்தது.

இது ஒரு புறம் இருக்க 2021ம் ஆண்டு ஜெய்பீம்,கர்ணன், சார்பாட்டா பரம்பரை போன்ற படங்கள் தமிழில் வெளியாகியிருந்தாலும் இப்படங்களுக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. இதனால் புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்று பிரபலம் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


மேலும் அந்த பத்திரிகையாளர் தெரிவிக்கும் போது புஷ்பா பட காரெக்டர் என்பது இயற்கைக்கு புறம்பானது ,கடத்தலை மையமாக வைத்து மட்டுமே உருவாகியிருக்கிறது. இப்படி சமூகத்திற்கு எதிராக நடித்த ஒரு கதாப்பாத்திரத்திற்கு இப்படியொரு விருதினைக் கொடுத்தார்கள் என்பது தான் ஆச்சரியமாகவே இருக்கு என்றும் இது தவறான விடயம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement