சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த வகையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அப்பத்தா வரச் சொன்னதால் ஜீவானந்தம் குணசேகரன் வீட்டுக்கு வந்திருக்கின்றார். அப்போது அங்கு வந்திருக்கும் அட்வக்கேட் ஜீவானந்தத்தைப் பார்த்து உங்களுடைய பெயரை நான் நிறைய சந்தர்பங்களில் கேட்டிருக்கிறேன் என்று சொல்ல, அப்பத்தா ஜீவானந்தம் ரொம்ப நல்லவர் என்று சொல்கின்றார்.
தொடர்ந்து அங்கு வரும் குணசேகரன் நான் அழிஞ்சாலும் பரவாயில்லை,உங்க எல்லோரையும் அழிச்சிட்டு தான் அழிவேன் என்று சொல்கின்றார். இதைக் கேட் அப்பத்தா நிறுத்து குணசேகரா என்று அவரை ஆப் செய்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!