• Apr 28 2024

நாய்சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிச்சாச்சு- ரசிகர்களுக்கு மீண்டும் தரிசனம் கொடுக்கவுள்ள வடிவேலு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் வடிவேலு நடிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ்'.இதில்  நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு,இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்  தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா  சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.  


வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன.இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்தனர்.


இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பிரபல 'திங்க் மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேக மோஷன் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement