• May 14 2024

லேசான இருமல் தான்- அது பெரிய நியூஸாக வர இது தான் காரணம்- ரசிகர்களை சந்தித்த கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்த்திரமாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடிப்பது, இயக்குவது, கதை- வசனம்- பாடல்கள் எழுதுவது ,  பாடல் பாடுவது, திரைப்படங்களை தயாரிப்பது உள்ளிட்ட பன்முகத் திறன் கொண்டவராக விளங்குபவர் தான் கமல்ஹாசன்.

 தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். இது தவிர ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகின்றார்.இந்த சூழலில்தான்,  நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. 


இதனை அடுத்து இவைகுறித்த உண்மை தகவல்கள் மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில், சென்னை போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இந்த நவம்பர் 23-ஆம் தேதி லேசான காய்ச்சல், ஜலதோஷம், இருமல் உள்ளிட்டவற்றுடன் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர் தற்போது நலமுடன் தேடி வருகிறார் என்றும், ஒன்றிரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பிலான டிஎஸ்பி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அதில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன்,  “சகோதரர் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்காக வந்திருக்கிறேன். டிரைலர் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நான் நலமாகவே இருக்கிறேன். இருமல்தான் வேறொன்றுமில்லை. முந்தியெல்லாம் பெரிய விபத்து நடக்கும் பொழுது கூட அடுத்து என்னை பார்த்தால் அடுத்த எப்போ படம் ரிலீஸ்? எப்போ ஷூட்டிங் என்று கேட்பார்கள். ஆனால் இப்போது இருமல் தான். மிகப்பெரிய செய்திகள் எல்லாம் எனக்கு வருகிறது. இதற்கு காரணம் ஒன்று ஊடகம், இன்னொன்று பெருகி இருக்கும் அன்பு என்று நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார். 


Advertisement

Advertisement

Advertisement