• Jan 19 2025

நாக சைதன்யாவுக்கு விரைவில் 2வது திருமணம்! மணமகளும் ரெடி? யாருன்னு தெரியுமா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் நாககார்ஜுனா. இவரின் முத்த புதல்வரான  நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகையான சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின் 4வருடம் வாழ்ந்த இருவரும் திடீரென பிரிவதாக அறிவித்து இருந்தார்கள். இது சமந்தா ரசிகர்களுக்கும்  நாக சைதன்யா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதன் பிறகு இவர்களின் விவாகரத்து பற்றி பதல தகவல்கள் மற்றும் வதந்திகள் என சோசியல் மீடியாவில் தீயாக பரவியது. நாக சைதன்யாவை பிரிந்துவிட்டாலும் சமந்தா அவரின் தம்பி அகில் அக்கினேனியுடன் இன்றுவரை நட்பாகவே பழகி வருகின்றார். 


இருப்பினும் சமந்தாவும் நாக சைதன்யாவும் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாது தமது சினிமாக் கேரியரை முன்னெடுத்து செல்கின்றார்கள்.

இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யப்போகும் அந்த பெண் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, அந்த பெண் வேறு யாரோ இல்லையாம். நாகார்ஜுனாவின் உறவினர் தானாம்.


அத்துடன், அவர்களின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் டின்னர் டேட் பண்ணிட்டு இருந்த போட்டோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதேவேளை. நடிகை சமந்தாவின் இரண்டாவது திருமணம் விரைவில் நடக்கப் போவதாக சமூக வலைதளங்களில் இன்னும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisement

Advertisement