• Apr 28 2024

என் மகளுக்கு நான் அறிவுரை கூறினால் பிடிக்காது- அதிதி பற்றி ஷங்கர் குறிப்பிட்ட முக்கிய விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் தான் விருமன். இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளதோடு கார்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக இயக்குநர் சங்கரின் மகளான அதிதி நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12ஆம் தேதி விருமன் திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் மட்டும் மற்றும் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு இயக்குநர் ஷங்கர் பேசியதாவது-

இயக்குநர் முத்தையாவின் படங்களை நான் பார்த்ததில்லை. அவருடைய படத்தில் இடம்பெற்ற பாடல்களை பார்த்திருக்கிறேன். ரொம்ப அருமையான பாடல்கள் அவரது படத்தில் உள்ளன.அவருடைய படங்களில் பெண்களுடைய கதாபாத்திரத்தை அருமையாக சித்தரிப்பார் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதனால் எனது மகள் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் என்பதில் எனக்கு சந்தோஷம்.

பாடல் காட்சிகள் ஒவ்வொன்றும் மனதில் பதிவது போல் உள்ளன. கலை,எடிட்டிங்கும் சிறப்பாக உள்ளது.

ஒரு இயக்குநராக என் மகளை நான் பார்த்ததில் அவர் ஒரு நல்ல என்டர்டெய்னர். மேற்கொண்டு அவர் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். படக்குழுவினரை தனது குடும்பத்தை போல் பார்த்துக்கொண்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி.என் மகளுக்கு அறிவுரை கூற வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. இந்த ஜெனரேஷன் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். என் மகளுக்கு நான் அறிவுரை கூறினால் பிடிக்காது.

சும்மா நம்மள பார்த்து நான்கு விஷயங்கள் தெரிஞ்சுகிட்டாலே அதுவே பெரிய விஷயம். இன்றைக்குதான் அவர் நடிகை. நேற்று வரை அவர் உங்களைப் போன்று விசிலடித்து, கைதட்டி ரசிக்கின்ற ஒரு ரசிகை. ஒரு ரசிகையாக இருந்தவர்தான் இப்போது நடிகையாக மாறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement