• Apr 25 2024

வெள்ளை சேலையில் தேவதை போல் நடந்து வரும் பிக்பாஸ் ஷிவானி…வைரலாகும் வீடியோ பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் தமது கனவு நனவாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு படிக்கல்லாக இருந்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கான வாய்ப்புகளைத் தேடித் தரக் கூடிய ஒரு நிகழச்சியே 'பிக்பாஸ்'. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஒருவரே ஷிவானி நாராயணன்.

எனினும் விஜய் டீவியில் இவர் முதன் முதலாக அறிமுகமாகி இருந்தது 2016-ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'பகல் நிலவு' என்ற சீரியலின் மூலமாகத் தான். அந்த சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஷிவானி முதல் நாடகத்திலேயே தன்னுடைய பிரமாண்டமான நடிப்பின் வாயிலாக பல ரசிகர்களை ஈர்த்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து பின்னர் 'இரட்டை ரோஜா' என்ற சீரியலிலும் அனு மற்றும் அபியாக வந்து இரட்டை வேடத்தில் நடித்ததன் மூலம் மென்மேலும் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். எனினும் சில காலத்தின் பின் இந்த சீரியலிலிருந்து விலகினார் ஷிவானி. இதனைத் தொடர்ந்து மீனாட்சி என்ற பெயரில் 'கடைக்குட்டி சிங்கம்' என்ற சீரியலிலும் தோன்றி கலக்கியிருந்தார்.

இவ்வாறாக சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வந்த ஷிவானி சீரியல்களை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் வாழ்வின் முக்கிய ஒரு திருப்பு முனையாக பிக்பாஸ் 4 அமைந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 4 இல் பங்கேற்றதன் மூலம் இவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.

அதாவது இவ் நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாக இருந்து வந்தார் ஷிவானி. எனினும் அவரின் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் காதல் கொண்டுள்ளதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது யாவரும் அறிந்த ஒரு விடயமே. பிக்பாஸ் வீட்டில் மட்டுமன்றி அந்நிகழ்ச்சி முடிந்த பின்னரும் கவர்ச்சி நாயகியாக காட்சி அளிக்கத் தொடங்கினார்.

இவர் காட்டிய படு கவர்ச்சியின் பலனாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதாவது கவர்ச்சி நாயகியாக வலம் வரும் ஷிவானி கமலின் 'விக்ரம்', பொன்ராம் இயக்கும் புதிய படம், RJ பாலாஜியின் படம், 'பம்பர்', வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக படங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷிவானி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அங்கும் கவர்ச்சி மிகுந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது வெள்ளை நிற சேலை அணிந்து தனது புகைப்படத்தினைப் பகிர்ந்திருக்கின்றார்.

அதுமட்டுமன்றி அதே சேலையில் தேவதை போன்று நடந்து வருகின்ற வீடியோ ஒன்றினையும் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ஷிவானி ரசிகர்கள் அவ்வீடியோ, மற்றும் புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement