• Apr 25 2024

புதிய படத்தில் கதாநாயகனாகும் சமுத்திரக்கனி- மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் தம்பி ராமையா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் தம்பி ராமையா. இவர் தமிழில் விஜய் ,அஜித், சூர்யா, விஷால் போன்றோரின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றார்.இவர் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் கவனத்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து மைனா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் இயக்குநராக ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார்.

மேலும் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவரோடு தம்பி ராமையாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும் தம்பி ராமையாவும் இணைந்து நடித்த விநோதய சித்தம் திரைப்படம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் எளிமையாக தொடங்கியது. படத்துக்கு ‘ராசாக்கிளி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement