• Jan 18 2025

விஜயாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன முத்து.. ரவி கொடுத்த பதிலடி! சுக்குநூறாக சிதறிய குடும்பம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில்,  அண்ணாமலை ரவிக்கு போன் போட்டு ரவியை வீட்டுக்கு வரச் சொல்ல, ஸ்ருதி கிட்ட எப்படி பேசுறது என்று  தெரியல, வீட்டுக்கு வரணுமானு தோணுது என்று சொன்னதும், அப்போ உனக்கு நாங்க எல்லாம் வேண்டாமா என அண்ணாமலை போனை வைத்து விடுகிறார்.

வெளியே அண்ணாமலை வந்ததும் என்ன ஆச்சு என விஜயா கேட்க, அவன் வருவான் என்று சொல்லிவிட்டு போகிறார். இதை பார்த்தால் எனக்கு நம்பிக்கை இல்லை என டென்ஷன் ஆகுறார் விஜயா.

மறுபக்கம் முத்து ஹோட்டலுக்கு கூட்டிப்போய் மீனாவை சாப்பிட   சொல்ல  மீனா எனக்கும் வேணாம், நான் சாப்பிடும் நிலைமையில் இல்லை என்று கூறி,  எதுக்கு அவர் மேல கைய வச்சீங்க? கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் என  சொல்ல, என் பொண்டாடி பத்தி அவர் அப்படி என்னிடம் சொல்லும் போது நான் எப்படி அமைதியா இருக்க முடியும் என்று முத்து கோபப்படுகிறார்.


வீட்டுக்கு போகலாம் என்று மீனா சொல்ல, அங்க போனா உங்க மாமியார் எதுவும் பேசி சாப்பிட விட மாட்டாங்க. அதனால சாப்பிட்டு போகலாம். அவங்ககிட்ட திட்டு வாங்குறதுக்கு தெம்பு வேண்டாமா என்று முத்து சொல்கிறார்.  எனக்கு வேண்டாம் என்று மீனா சொல்ல, சரி உன்ன விட்டுட்டு நான் போய்  சரக்கு அடிக்க போறேன்னு மிரட்டி மீனாவை சாப்பிட வைக்கிறார்.

இன்னொரு பக்கம், ஸ்ருதியை வீட்டுக்கு ரவி கூப்பிட, அவர் வர முடியாது. நீ போறதா இருந்தா போ. உன்னை தடுக்க மாட்டேன் என சொல்கிறார். பிறகு ரவி வெளியில் கிளம்ப ஸ்ருதியின் அம்மா சாப்பிட்டு போக சொல்ல ரவி பசி இல்லை என சொல்கிறார். இப்படி நடந்துருச்சே மாப்பிள்ளை என்று ஸ்ருதி பேச இவரும் அண்ணி மேல பழி போட்டு பேசாம இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்ல என்று ரவி பதிலடி கொடுத்துவிட்டு நகர்கிறார். 

அடுத்ததாக முத்து மீனா வீட்டுக்கு வர அவர்களை விஜயா தடுத்து நிறுத்தி ஏன் இங்கு வந்தீங்க? வீட்டுக்குள்ள இவங்க இருக்கிற வரைக்கும் இந்த வீட்ல யாரும் நிம்மதியா இருக்க முடியாது. அவ்வளவு பெரிய மனுஷன் மேல கைய வெச்சி இருக்க உனக்கு அசிங்கமா இல்லையா? என்ற முத்துவைத் திட்ட, யார் பெரிய மனுஷன் எல்லாத்தையும் மறந்துட்டு அந்த ஓடு காலிகளை வீட்டில் சேர்த்துக்கொண்ட எங்க அப்பா தான் பெரிய மனுஷன் என்று முத்து சொல்கிறார்.

அண்ணாமலையும் என்னதான் அவர் பேசி இருந்தாலும் அவர் மேல கைய வச்சி இருக்கக் கூடாது என்று சொல்ல, என் பொண்டாட்டிய திருடி என்று  சொல்லும்போது நான் எப்படி அமைதியாக இருக்க முடியும். நானும் எவ்வளவு  பொறுமையா இருந்தேன். ஆனா அந்த ஆள் ரொம்ப பேசிட்டார் என்று கூறுகிறார். 

ஆனாலும் விஜயா, இந்த வீட்டில் இனி அவங்க இருக்கக் கூடாது. ஒன்னு  நான் இருக்கணும் இல்ல. அவங்க இருக்கணும் என்று சொல்ல, அவ்வளவுக்கு  ஆயிருச்சா சரி நாங்க இருக்கிறோம் அவங்கள போயிட சொல்லுப்பா என்று விஜயாவுக்கு முத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஆனாலும் விஜயா, இந்த வீட்டில் அவங்க இருந்தா ஒவ்வொருத்தரா வெளிய  போக வேண்டியதுதான் என்று சொல்ல, இப்ப என்ன நாங்க வெளியே போகணும்அவ்வளவுதானே. மீனா போய் உன் துணியெல்லாம் எடுத்து வை அன்று சொல்ல, விஜயா சந்தோஷப்படுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement