• Jan 19 2025

அமெரிக்காவை விட்டு குடும்பத்தோடு கிளம்பிய நெப்போலியன்! ஏன் தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக காணப்படுபவர் தான் நெப்போலியன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல நடித்துள்ளார். அவர் எஜமான் படத்தில் நடித்த வில்லன் கேரக்டர் இன்றுவரை சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இதனால்  குணசித்திர கேரக்டர்களும் நடிக்க ஆரம்பித்தார். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் பிஸியான ஒரு நபராக காணப்பட்டார். ஒரு கட்டத்தில் அரசியலிழும் இருந்து விலகி தனது குடும்பத்துடன் சென்று அமெரிக்காவில் ஆகிவிட்டார்.

நெப்போலியனுக்கு  தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் காணப்படுகின்றார்கள். அதில் தனுஷுக்கு தசைச் சிதைவு நோய் ஏற்பட்டது. ஆரம்பத்திலேயே இந்தியாவில் வைத்து சரி செய்ய முடியாத காரணத்தினால் அமெரிக்காவுக்கு சென்று விட்டார்கள். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் கிடைப்பதனால் அவர் அமெரிக்காவிலேயே தனது குடும்பத்துடன் செட்டிலானார்.


இவ்வாறான சூழலில் தனுஷுக்கு திருமண ஏற்பாடும் செய்தார் நெப்போலியன். திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து முடித்துள்ளார்கள். இந்த நிச்சயதார்த்தத்தில் தனுஷ் வீடியோ காலிங் மூலம் தான் கலந்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஜப்பானில் நடக்க உள்ளது.

இந்த  நிலையில்,தற்போது நெப்போலியன் குடும்பத்தார் மகனின் திருமணத்திற்காக ஜப்பானுக்கு சென்றுள்ளார்.  தனுஷால்  விமானத்தில் செல்ல முடியாது என்பதால் கப்பலிலேயே எல்லாரும் சென்றுள்ளார்கள். அவர்கள் கிளம்பும் செய்தியை அறிந்த நெப்போலியனின் நண்பர்கள் பலர் வீட்டுக்கு வந்து வழி அனுப்பி  வைத்ததாக தற்போது சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement