• Jan 19 2025

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த மோகன்லால்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

ஒரு மாத காலமாக கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையினால்  நிலச்சரிவு ஏற்பட்டு ஒரே நாளில் மக்களின்  உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் இல்லாது ஒழித்து விட்டது.

வயநாடு நிலச்சரவில் சிக்கிய மக்களை தற்போது வரையில் மீட்புப் படையினர்  மீட்டு வரும் நிலையில், இதுவரையில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் புதைமண்ணில் சிக்கி சிலர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


இதன் காரணத்தினால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட கேரள முதல்வர், தங்களால் முடிந்த நிவாரண நிதியை செய்யுமாறு அறிவித்துள்ளார். இதனால் வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார்கள்.


அந்த வகையில் விக்ரம் 20 லட்சம், நடிகர் சூர்யா 50 லட்சம், நயன்தாரா 20 லட்சமும், நஸ்ரியா 25 லட்சமும், மம்பட்டி மற்றும் துல்கர்  சல்மான் 35 லட்சமும் கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் பிரபல நடிகர் மோகன்லால் ஆர்மி உடைய அணிந்து வயநாடு பகுதியை பார்வையிட்டதோடு மட்டுமின்றி மூன்று கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் இது மிகவும் துயரமான சம்பவம் என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

Advertisement

Advertisement