• Aug 11 2026

மலையாள இயக்குநருடன் முதல் கூட்டணி வைத்த சூர்யா.? என்ன கேரக்டர் தெரியுமா? அதகள அப்டேட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 47’ என அழைக்கப்படும் இந்த படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

‘ஆவேஷம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்திருப்பதால் இந்த படம் தனித்துவமான கதையமைப்புடன் இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.

சூர்யாவின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட ஒரு பாணியில் இந்த படம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து மலையாள நடிகர் நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா நசீம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம் பணியாற்றுகிறார்.


படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் படம் ஒரு க்ரைம் டிராமா அல்லது இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இருக்கலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தயாரிப்பில் உருவாகும் இந்த படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.

சென்னை நகரில் நடைபெற்று வரும் ஷூட்டிங் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement