• Aug 23 2025

விஜய்க்கு ரசிகர்கள் சடுதியாக குறைஞ்சிடுவாங்க..!! இன்றே கணித்த பிரபல இயக்குனர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக காணப்படும் நடிகர் விஜய் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கு பெரும் அதிர்ச்சியாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆன இயக்குனர் ஆர். கே செல்வமணி விஜய் அரசியலுக்கு சென்று விட்டால் அவருடைய ரசிகர்கள் பாதியாக குறைந்து விடுவார்கள் என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில்,  சுமார் 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் இன்னும் ஒரு படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்துள்ளார். அவர் முழு நேர அரசியல் வாதியாகவே மாறி மக்களுக்கு தொண்டு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னனாகவும் இருக்கும் விஜய் இவ்வாறான முடிவு எடுத்தது அவரது தனிப்பட்ட விருப்பம்.


இப்போது கூட அவர் ஓகே சொன்னார் பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து  படம் தயாரிக்க காத்துக் கொண்டு உள்ளார்கள். மேலும் நடிகர் விஜய் சினிமாவில் இருக்கும்போது அவருக்கு 100% ரசிகர்கள் இருப்பார்கள்.  ஆனால் அரசியல் என்று சென்று விட்டால் இப்போது இருக்கும் ரசிகர் கூட்டம் அப்படியே விஜய்க்கு பாதியாக குறைந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் செல்வமணியின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் அதெல்லாம் குறையாது 2026 இல் அவரது பலத்தை பார்ப்பீங்க என்று கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement