சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், சத்யாவின் வீட்டுக்கு வந்த போலீசார், “ரேகாவை எதற்காக கடத்தினாய்?” என்று கேட்டு அவரை தரதரவென இழுத்துச் செல்கின்றனர். இதனால் சத்யாவின் அம்மா செய்வதறியாமல் உடனே மீனாவுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூறுகின்றார்.
அதன்பின் சீதாவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற சத்யாவின் அம்மா, அவரை வெளியில் விடுமாறு கெஞ்சுகின்றார். மேலும் அங்கிருந்த அருணிடமும், “சத்யா எந்தத் தவறும் செய்யவில்லை, அவரை வெளியே விட பேசுங்கள்” என்று கேட்கிறார். ஆனால் அருண், “அவன் தவறு செய்திருக்கின்றான், என்னால் ஒன்றும் பண்ண முடியாது” என்று கூறுகிறார்.
இதையடுத்து மீனாவும் முத்துவும் பதற்றத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, “அவனுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை” என்று விளக்குகின்றனர். ஆனாலும் போலீசார் அதை ஏற்க மறுக்கின்றனர்.

பின்னர் முத்து, போலீசாரிடம் சத்யா மீது தவறு இல்லை, அவனை விடுவிக்க வேண்டும் என்று அருணிடம் கூறுகிறார். இதனால் முத்து மீது இருந்த கோபத்தில், “இதற்குத்தான் காதலுக்கு சப்போர்ட் பண்ணக்கூடாது” என்று அதிகாரமாக பேசி செல்லுகிறார் அருண்..
இதைத்தொடர்ந்து, ரேகா உண்மையில் எங்கு இருக்கின்றார் என்பதை அறிய மீனா சிந்தாமணியின் கணவர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஒளிந்திருந்து கண்காணிக்கிறார். அப்போது சிந்தாமணி அங்கு வருவதும், புதிதாக வேலைக்கு ஆட்கள் இருப்பதும் தெரிய வருகிறது.
இறுதியில், அங்கு வேலை செய்யும் சமையல்காரின் வீட்டுக்கு சென்ற மீனா, தனக்கு அவசரமாக பணம் தேவை என்று கூறி கதையை விடுகிறார்.அப்போது ரேகா அங்கு தான் இருக்கிறார், அவரை ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை அறிகிறார். இதுவே இன்றைய எபிசோட்.
Listen News!