• Jun 09 2026

100 பிச்சைக்காரர்களுக்கு நடுவுல விஜய் சேதுபதியை கண்டுபிடிக்க முடியல.! கணேஷின் பேச்சு வைரல்

Aathira / 11 hours ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை தபு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ஸ்லம் டாக் திரைப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கணேஷ், படப்பிடிப்பு அனுபவங்களையும் சக நடிகர்கள் குறித்த தனது கருத்துகளையும் கலகலப்பாக பகிர்ந்துகொண்டார்.

இந்த நிலையில், ஸ்லம் டாக் பட நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கணேஷ், முதலில் இயக்குநர் பூரி ஜெகந்நாத்துடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.

அதன்படி அவர் கூறுகையில், பூரி சார் கூப்பிட்ட உடனே போய் பார்க்கணும்னு தோணிச்சு. ‘போக்கிரி’ மாதிரி பெரிய படங்களை எடுத்த டைரக்டர்னு நிறைய பில்டப் கேட்டிருந்தேன். ஆனா நேர்ல போய் பார்த்தா ரொம்ப சாப்ட் நேச்சர் உள்ள மனிதர். அவரோட டின்னர்ல பேசும்போதே என்னோட 10 நாள் வேலை எப்படிப் போகப்போகுதுன்னு புரிஞ்சிடுச்சு..


படத்தில் தபுவின் உதவியாளராக நடித்ததாக கூறிய கணேஷ், அவரைப் பற்றிப் பேசும்போது ரசிகர்களை சிரிக்க வைத்தார். 

அதன்படி, தபுவை பார்த்ததும் காலி ஆயிட்டேன்.. காதல் தேசம் காலத்துல பார்த்த தபுவை மீண்டும் பார்க்கிற சந்தோஷம் இருந்தது. ஃபர்ஸ்ட் டேவே ‘உன்ன இதுக்கு முன்னாடி பார்த்திருக்கேனே’ன்னு சொன்னாங்க. அங்கேயே காலி ஆயிட்டேன் என்று நகைச்சுவையாக கூறினார்.

மேலும், அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா அவங்க வீட்டு நேய்பரா இருக்கணும்னு அவங்கள்கிட்டயே சொல்லிட்டேன். அடிக்கடி எட்டிப் பார்த்தாவது இருக்கலாம். அவ்வளவுதான் நம்மளால முடியும் என்று கூறியபோது அரங்கமே சிரிப்பில் மூழ்கியது.

அத்துடன் 10 நாளும் மட்டன், சிக்கன், புலாவ்.. 10 நாள் ஷூட்டிங் முழுக்க அவங்களோட கேரியர்ல இருந்து மட்டன், சிக்கன், புலாவ் எல்லாம் வந்துச்சு. நம்ம மட்டுமில்ல, கேரவன் வெளியில இருந்த எல்லாரும் சாப்பிடலாம் போல அனுப்புவாங்க. இப்படி ஒரு பெண்மணியை நான் பார்த்ததே இல்ல.. என்றார்.

படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் குறித்து பேசிய அவர், இந்த வேஷத்தோட 100 பிச்சைக்காரர்களை நிறுத்தினாலும் நடுவுல இருக்குற விஜய் சேதுபதியை கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு கேரக்டர்ல கலந்துட்டாரு. அதனாலதான் அவருக்கு ‘மக்கள் செல்வன்’ன்னு பேரு சரியா பொருந்துது என்று புகழ்ந்தார்.


விஜய் சேதுபதியின் உழைப்பை பற்றி பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கணேஷ், நான் ‘பீஸ்ட்’ படத்துல 42 நாள் வேலை பார்த்திருக்கேன். அங்க விஜய் சார் எவ்வளவு டெடிகேஷனோட இருந்தாரோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு விஜய் சேதுபதியும் எஃபர்ட் போடுறாரு.

காலையிலேயே டயலாக் பேப்பர் எடுத்துக்கிட்டு மனப்பாடம் பண்ணிக்கிட்டு இருப்பாரு. ‘இத உள்ள வாங்கினாதான் உள்ளிருந்து வேற ஒன்னு வரும்’ன்னு சொல்வாரு. அந்த டெடிகேஷன்தான் இன்னைக்கு அவரை ஆல் இந்தியா ஸ்டாரா கொண்டு போயிருக்கு என்றார்.

படத்தின் டீசர் குறித்தும் கணேஷ் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசினார். அதில், டீசர்ல நான் ஆட்டுன ஒரு ஷாட் மட்டும் இருக்கு. அதுலயும் என் முகமே தெரியல. பேக் மட்டும் புரமோட் பண்ணிருக்காங்க. நான் நடிச்ச படத்துல டீசர்ல முதுகை மட்டும் ஹைலைட் பண்ணது இதுதான் முதல் தடவை என்று சிரித்தபடி கூறினார்.

இறுதியாக படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த கணேஷ், சார்மி மேடம் ரொம்ப அர்ப்பணிப்போட இந்த படத்தை தயாரிச்சிருக்காங்க. பூரி சார், விஜய் சேதுபதி, முழு டீமும் மிகச் சிறப்பா வேலை பண்ணிருக்காங்க. இந்த படம் பெரிய வெற்றி அடையணும். விஜய் சேதுபதிக்காகவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இந்த படத்தை கொண்டாடும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement