• Jun 10 2026

உடைந்து நின்ற சிவகுமார் குடும்பம்.. நீலாங்கரையில் கண்ணீர் அஞ்சலி

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலக அரங்கிற்கு அறிமுகப்படுத்திய முன்னணி இயக்குநரும் “இயக்குநர் இமயம்” என போற்றப்படுபவருமான பாரதிராஜா (84) இன்று காலமானார். 

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

தனது திரை வாழ்க்கையில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா, தனது படைப்புகளுக்காக 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டவர்.


கிராமத்து கதைகளை உணர்வுபூர்வமாக சொல்லி, தமிழ் சினிமாவின் கதை சொல்லும் முறையை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

அவரது உடல் தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சிவக்குமார், அவரது மகன் நடிகர் சூர்யா, மற்றும் மருமகள் நடிகை ஜோதிகா ஆகியோர் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தங்களது இரங்கலைப் பகிர்ந்தனர்.

பாரதிராஜாவின் மறைவு குறித்து திரையுலகினர் பலரும் “தமிழ் சினிமாவின் ஒரு காலம் முடிந்தது” என உருக்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது படைப்புகள் இன்று வரை பல தலைமுறைகளால் நினைவுகூரப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement