மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் என்கிற திரைப்படத்தில் தன்னுடைய 'கண்மணி அன்போடு காதலன்' என்ற பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி விட்டார்கள் என்று படத்தின் தயாரிப்பாளருக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது கோலிவுட் சினிமாவை மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ்நாடு, கேரளாவில் மிகப்பெரிய சர்ச்சையாகவும் விவாத பொருளாகவும் மாறி இருக்கிறது.
இந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தில் 'கண்மணி அன்போடு காதலன்' பாடல் இல்லை என்றால் அது ஒரு சதத்திற்கும் உதவி இருக்காது. குப்பையாக இருந்ததை கோபுரமாக மாற்றியது இளையராஜாவின் இசை தான் என பிரபல யூடுபர் ஒருவர் பேசியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
இளையராஜா மீது எந்த தவறும் இல்லை. அவர் குறைந்தபட்சம் தனது உரிமையை தான் கேட்கின்றார். இந்தப் பாடலை பயன்படுத்துவதற்கு முன்னர் படக்குழுவினர் சார்பில் யாராவது இளையராஜாவை நாடி இருக்க வேண்டும். அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்திருக்க வேண்டும். அவரிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஒரு நன்றியை சரி தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை.
ஒரு பாட்டை வைத்து 210 கோடி சம்பாதிக்கிறீங்க. அந்த பாட்டை கழித்து விட்டால் உண்மையில் மஞ்சுமெல் பாய்ஸ் ஒரு குப்பை. அந்த குப்பைக்கு அழகு சேர்த்தது குணா திரைப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் தான்.
இதனால் நீங்கள் தான் நன்றி கடன் பட்டு உள்ளீர்கள். உண்மையான ஒரு படைப்பாளியாக இருந்தால் இன்னொரு படைப்பாளியை கொண்டாடணும் ரசிக்கனும் அவனுக்கு நன்றி சொல்லணும். இந்த படத்தின் வெற்றியில் கமலை கட்டித்தழுவி முத்தமிட்டிர்கள். தயாரிப்பாளரை சந்தித்திர்கள், ஆனால் அதன் முக்கிய கர்த்தா இசைஞானியை சந்திக்கவில்லை. அவர் பணத்தாசை பிடித்தவர் இல்லை. எல்லாரும் தமது இசையை தனியாக தான் வைத்துள்ளார்.
Listen News!