• Jan 18 2025

ஸ்ருதியின் பேச்சால் கடுப்பாகிக் கிளம்பிய மீனா- ஸ்ருதிக்கு காத்திருந்த பேராபத்து- அதிர்ச்சியில் உறைந்த ரவி-Siragadikka Aasai Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மீனாவை சந்தித்த ஸ்ருதி, ரவி எப்போதும் குடும்பத்தை பற்றியே பேசிட்டு இருக்கிறான். என்னைப் பற்றி யோசிக்கிறானே இல்லை என ரவி மீது பல குற்றச்சாட்டுக்களை எடுத்து வைக்கின்றார். இதைக் கேட்ட மீனா, அவர் குடும்பத்தை பற்றி பேசிறதில என்ன தப்பு அவர் எல்லோரும் சேர்ந்து இருக்கோனும் என்று தானே நினைக்கிறார் என்று சொல்லகின்றார்.


அப்போது ஸ்ருதி நீங்க மாமி வீட்டில இருந்தாலும் உங்கள உங்க ஹஸ்பண்டும் மாமியாரும் திட்டிட்டு தானே இருக்கிறாங்க, என்னால அப்பிடி எல்லாம் வாழ முடியாது. யாரையும் சமாளித்துப் போகவும் முடியாது என்று சொல்கின்றார்.அப்போது கடுப்பான மீனா எதையும் சமாளித்து போக முடியாது என்றால் எதுக்கு கல்யாணம் பண்ணினீங்க.

உங்க ஆசைகள் மட்டும் நிறைவேறினால் சரி என்று நினைக்கிற உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது என்று சொல்லி விட்டு கிளம்பி விட ஸ்ருதி மீனாவிடம் பேசுவதற்காக பின்னாலேயே போகின்றார். அந்த நேரம் ஸ்ருதிக்கு பேசியிருந்த விச்சு ஸ்ருதியை அடியாட்களுடன் மறித்து அசிட் அடிப்பதற்காக பிடித்து வைக்கின்றார்.


அப்போது மீனா கற்களால் எறிந்து விச்சுவின் கையிலிருந்த அசிட்டை உடைக்கின்றார்.தொடர்ந்து ஸ்ருதியைக் காப்பாற்றி அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று டீ போட்டுக் கொடுத்து அட்வைஸ்ட் பண்ணுகின்றார். குடும்பமாக சேர்ந்து இருப்பதால் எவ்வளவு நல்லம் பார்த்தீங்களா,இப்போ நான் இல்லாட்டி உங்களை யார் காப்பாற்றி இருப்பாங்க என்று சொல்கின்றார்.

கவலைப்படாதீங்க நான் வீட்டில பேசிக்கிறேன்,நான் சொன்னால் மாமா கேட்பாரு என்று சொல்ல, அந்த நேரம் ரவியும் வந்து ஸ்ருதியை ஆறுதல்ப்படுத்துகின்றார்.தொடர்ந்து ஸ்ருதி வீட்டுக்குச் செல்லும் மீனா அங்கு நடந்த எல்லாவற்றையும் சொல்ல அவர்கள் அதைக் கேட்டு அதிர்ச்சியிடைகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement