தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விஜய், அண்மையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயருடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார் நடிகர் விஜய்.
இதன் காரணமாக தற்போது தனது அரசியல் துறைக்கும், சினிமா துறைக்கும் இடையில் இடையூறு ஏற்படாத வகையில் இரண்டையும் சமாளித்து வருகிறார் விஜய்.
ஆனாலும் தற்போது கமிட்டாகியுள்ள இரண்டு படங்களில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமா துறையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் அதிரடியாகவே வெளியாகின்றது.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட ஒரு மாதத்தில் 'விலையில்லா வீடு' வழங்கும் திட்டத்தை பற்றி சொல்லியிருந்தார். அவர் அறிவித்ததின் படியே நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இடத்தில் விஜயின் விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தில் ஏழு வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று மாலை அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி விஜயினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதோ குறித்த வீடியோ,
#தமிழகவெற்றிக்கழகம் #TVKMembershipDrive #TVKVijay pic.twitter.com/e4DqN18sn2
Listen News!