• Aug 08 2025

ஒரே படத்தில் 45 வேடங்கள்..! – கமலைத் தாண்டிய சாதனை படைத்த மலையாள நடிகர்..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு மாபெரும் சாதனையாளராக இடம்பிடித்தவர் நடிகர் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசன் தான். குறிப்பாக, 2008ம் ஆண்டு வெளியான ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் 10 வேடங்களில் அவர் நடித்து திரையுலகில் அனைவரையும் மயக்கியிருந்தார். அந்தப் படம் மட்டுமின்றி, கமலின் அந்த நடிப்புத் திறமை இன்றும் சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள், வீடியோக்கள் மூலம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான மலையாள திரைப்படமான "ஆரணு நஞ்சன்" என்பதில்தான் ஜான்சன் ஜார்ஜ் மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஒரு படத்தில் அவர் 45 வெவ்வேறு வேடங்களில் நடித்துள்ளார். 

ஜான்சன் ஜார்ஜ் இந்தப் படத்தில் காமெடியன், தந்தை, பொலீஸ் அதிகாரி மற்றும் துரோகி எனத்  தனித்துவமான 45 கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு வேடத்திற்கும் தனித்தனி உடைகள், குரல் மாறுதல் என முழு மேக்கோவர் செய்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற சவாலான முயற்சியை தமிழில் கமல்ஹாசன் மட்டுமே இதற்கு முன் செய்திருந்தார். ஆனால், இப்போது அந்த சாதனையை சில மடங்கு உயர்த்தியுள்ளார் ஜான்சன். இவ்வாறு ஒரே படத்தில் 45 வேடங்களில் நடித்ததற்காக, ஜான்சன் ஜார்ஜின் பெயர் Guinness World Records புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement