• Apr 02 2025

பூடான் நாட்டு நீச்சல் குளத்தையும் விட்டு வைக்கவில்லையா? மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது உலகின் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அவர் எந்த நாட்டிற்கு சுற்றுலா சென்றாலும் அந்த நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் அல்லது வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் அவரது ஃபாலோயர்களுக்கு தெரிந்திருக்கும்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக நடிகை மாளவிகா மோகனன் பூடான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் அங்கு உள்ள இயற்கையான காட்சிகள், இமயமலையின் அடிவாரத்தில் உள்ள பனி பொழிந்த காட்சிகள், ஆற்றின் குறுக்கே செல்லும் பாலம் உள்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அவை அவரது ஃபாலோயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூடான் நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து பூடான் நாட்டில் உள்ள நீச்சல் குளத்தையும் விட்டு வைக்கவில்லையா என்று அவரது பதிவுக்கு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. மேலும் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவானபேட்டஎன்ற திரைப்படத்தில் தமிழ் திரை உலகில் அறிமுகமான மாளவிகா மோகனன், அதன்பின்மாஸ்டர்’ ’மாறன்உள்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது விரைவில் வெளியாகியுள்ளதங்கலான்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வரும் நிலையில் இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.


Advertisement

Advertisement