• Sep 21 2024

ஹன்சிகாவை உங்கள் படத்தில் ஹீரோயினாக ஆக்க வேண்டும்- சிம்புவிடம் கோரிக்கை வைத்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா. இப்படம் இவருடைய 50 வது படம் என்பதோடு இப்படத்தில் ஹன்சிகாவுன் இணைந்து நடிகர் சிம்புவும் கேமியோ ரோலில் நடித்திருக்கின்றார்.

இந்த படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. க்ரைம், த்ரில்லிங் திரைப்படமான இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.

40 நிமிடங்களுக்கும் மேலாக சிம்பு இந்த படத்தில் வர உள்ள நிலையில், அவரது பஞ்ச் வசனம், ஆக்‌ஷன், அதிரடி, ரொமான்ஸ் என ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் ரசிகர்களுக்கு இந்த படத்தில் காத்திருப்பதாக அதன் மேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மஹா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து இருவரும் இணைந்து பல படங்கள் செய்வார்களா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெந்து தணிந்தது காடு, பத்து தல என பிசியாகி உள்ள சிம்பு, மீண்டும் தனது படத்தில் ஹன்சிகாவை ஹீரோயினாக ஆக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலங்களான சனம் ஷெட்டி, மகத் ராகவேந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement