• May 03 2024

பாவம் ஐயா அந்த மனுஷன்- இப்படி கூட்டிக் குறைக்க சொல்லுறீங்களே- திடீரென உடல் எடையை அதிகரித்த சிம்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் பல அவமானங்கள், தோல்விகள் என்பவற்றைச் சந்தித்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவாக உயர்ந்து நிற்பவர் தான் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் இவருடைய கெரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து மகா என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதன்பின், வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் கதாநாயனாக நடித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கிய இப்படமானது ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல் இப்படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

பத்து தல படம், கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சமீபத்தில் மாநாடு திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்த சிம்பு, தற்போது பத்து தல படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரித்துள்ளார்.

உடல் எடையை அதிகரித்த புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.இப்படி உடல் எடையை மாற்றி மாற்றி கூட்டி குறைப்பதால் பாவம் ஐயா நம்ம எஸ் ரி ஆர் என ரசிகர்கள் கூறி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement