• May 04 2024

கோப்ரா படத்தின் ரிலீஸ் திகதியில் ஏற்பட்ட சிக்கல்- படக்குழு போட்ட புதிய திட்டம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தான் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வைகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ஞானமுத்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அத்தோடு இப்படத்தில் விக்ரம் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருனாளினி ரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை பான் இந்தியா படமாக தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு இப்படத்தின் க்ளைமாக்சை ரஷ்யாவில் நடத்த திட்டமிட்டு, படக்குழு சென்றது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஷுட்டிங்கை நிறுத்தி விட்டு, படக்குழு இந்தியா திரும்பியது.தொடர்ந்து மீண்டும் 2020 டிசம்பர் மாதம் தான் படப்பிடிப்பு துவங்கி, 2021 ம் ஆண்டு மத்தியில் தான் முடிக்கப்பட்டது.

இந்த படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 25 கெட்அப்களில் நடிப்பதாக சொல்லப்பட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் கோப்ரா படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின்படி, தொழில்நுட்ப காரணங்களால் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement