• Sep 20 2024

வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் முக்கிய நடிகர்கள் -வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் 66 வது படமாக உருவாகி வரும் வாரிசு படம் குடும்ப சென்டிமென்ட் கதை என கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஒரு நட்சத்திர பட்டாமளே நடித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் முக்கியமான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. இது உண்மை தான். பிறந்தநாளான நேற்று முதல் வாரிசு பட செட்டில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக லேட்டஸ்டாக தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் தற்போது நடைபெற்று வரும் ஷுட்டிங்கில் விஜய் – ராஷ்மிகா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்ட பல முக்கியமான சீன்கள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதனால் படத்தில் நடிக்கும் அனைவரும் இந்த ஷுட்டிங்கில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் வாரிசு ரிலீஸ் என்று கூறப்பட்டாலும் இப்போதே பெரும்பாலான சீன்கள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் இருந்து தொடர்ந்து பல புகைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அதன்படி தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் உடன் நடிகர் ஷாம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் தான் எடுத்ததா என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால் இவர்கள் இவரும் தான் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement