• May 14 2024

திடீரென இணையத்தில் கசிந்த நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக கொடி கட்டிப் பறந்து வருபவர் நடிகர் சூர்யா.

இவரின் கட்டான உடலமைப்பிற்கும், அழகிற்கும், நடிப்பிற்கும், கம்பீரமான பேச்சிற்கும் என்றே இவருக்கு பெரியளவிலான ரசிகர் பட்டாளமே உண்டு. அத்தோடு மக்கள் மனங்களைக் கவரக்கூடிய வகையில் வெவ்வேறுபட்ட கதையம்சங்களைக் கொண்ட படங்களைத் தேர்ந்திடுத்து நடிக்கக்கூடிய திறமையும் இவருக்கு உண்டு.

தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகராக இருந்து வரும் இவர் தற்போது வணங்கான் படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இயக்குநர் சிவா இயக்கத்தில் விரைவில் நடிக்கவுள்ளார்.

அதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல், ரவிக்குமாரின் படம், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படம் என அவருக்கு வரிசைகட்டி படங்கள் நிற்கின்றன.

இந்நிலையில் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூரரைப் போற்று படத்திற்காக கிடைத்துள்ளது.

இவ்வாறு நிறைய நல்ல விஷயங்களை செய்து வரும் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 250 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement