நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மகாராஜா. இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் அழுத்தமான மற்றும் உணர்வு பூர்வமான கதைக்களத்துடன் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார் விஜய் சேதுபதி. மிகக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து இருந்தது.
இந்த நிலையில், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்க உள்ள இரண்டாவது திரைப்படம் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி தன்னுடைய முதல் படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நித்திலன் தனது இரண்டாவது படத்தில் நயன்தாராவை வைத்து மகாராணி என்ற டைட்டிலில் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளதாம். இதனை மகாராஜா படத்தை தயாரித்த ஃபேஷன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் கூடிய விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் அவருக்கு 75வது திரைப்படமாக அமைந்த போதும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை இந்த திரைப்படம் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!