• Nov 06 2024

மெட்ராஸ் சிறைக்கைதியான ஆர்.ஜே பாலாஜி..! ரிலீஸானது 'சொர்க்கவாசல்' போஸ்டர்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கியவர் தான் ஆர்.ஜே பாலாஜி. அதன் பின்பு ஹீரோவாகி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். மேலும் ஆர்ஜே பாலாஜி சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தை இயக்க உள்ளார் எனவும் இதற்கான  பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

அதாவது சூர்யாவின் 45 வது திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு  காணப்பட்டது.

இந்த நிலையில், ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி வைரலாகி உள்ளது. குறித்த போஸ்டரில் ஆர்.ஜே பாலாஜி சிறைக் கைதியாக காணப்படுகின்றார். மேலும் மத்திய சிறைச்சாலை மெட்ராஸ் என்ற பலகையுடன் நின்று உள்ளது போலவும் காட்டப்பட்டுள்ள காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு செல்வா, படத்தொகுப்பு பணியை செல்வா செய்து வரும் நிலையில், இந்த படத்தை ஸ்வைப் ரைட்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருவதாகவும் இது முழுமையாக நிறைவடைந்த பின்னர் சூர்யாவின் 45 ஆவது படத்தினை ஆர். ஜே பாலாஜி ஆரம்பிப்பார் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement