• Jan 18 2025

கடைசியா தலைவரே இறங்கி வந்துட்டாரு! GOAT பார்த்து ரஜனி ரியாக்சன்! வெங்கட் டுவிட்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் GOAT . இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் என பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி இப்படம் திரையில் வெளியானது.


என்னதான் படத்தில் ஒரு சில குறைகள் இருப்பதாக கூறினாலும் பெரும்பாலான ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டது. சிவகார்த்திகேயன், த்ரிஷா கேமியோ, அஜித்- தோனி ரெபரென்ஸ், விஜய்யின் வில்லத்தனமான நடிப்பு என பல ஹைலைட்டான விஷயங்கள் இப்படத்தில் இடம்பெற்றன.குறிப்பாக விஜய்யை நெகடிவான ரோலில் காட்டி மிரட்டியிருப்பார் வெங்கட் பிரபு


இப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெங்கட் பிரபுவை மனதார பாராட்டினாராம். இதைப்பற்றி வெங்கட் பிரபுவே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ரொம்ப நன்றி தலைவா, GOAT படத்தை பார்த்துவிட்டு மனதார பாராட்டிய ரஜினிக்கு நெகிழ்ச்சியாக தன் நன்றியினை தெரிவித்தார் வெங்கட் பிரபு. தற்போது இந்த பதிவு தான் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement