• Sep 21 2024

தோட்டத்தில் நின்று இளநீர் வெட்டும் மாதவன்- நீங்க மல்டி டாலென்டெட் பர்சன் என புகழ்ந்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாதவன். இவர் இதனைத் தொடர்ந்து என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் என்று பல வெற்றி படங்களை கொடுத்தார்

மேலும் இதில் அலைபாயுதே படம் வெளியாகி கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கடந்த பிறகும் ரசிகர்களால் பேசட்டும் பகிரப்பட்டும் வருகிறது. இது தவிர இவர் நடிப்பில் வெளியான அன்பே சிவம், நளதமயந்தி, பிரியமான தோழி, ஜே ஜே, போன்ற பல படங்கள் இன்றும் பேர் சொல்லும் அளவிற்கு இருக்கின்றது.

நடிகர் மாதவன் நடித்த இறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா திரைப்படம் கடைசியாக திரையரங்குகளில் வெளிவந்தது. அதன் பிறகு இவர் நடித்த மாறா திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. சமீபத்தில் நடிகர் நடிகர் மாதவன் சிம்ரன் இணைந்து நடித்த ராக்கெட்ரி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மாதவனின் ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. நடிகர் மாதவன் இளநீரை சர்ரு சர்ருன்னு வெட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்டுகள் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.நீங்க மல்டி டாலென்டெட் பர்சன் என்று புகழ்ந்து வருகின்றனர் என்பது் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement