• Apr 28 2024

மச்சான் சிவகார்த்திகேயன் தாறுமாறா நடிச்சிருக்கான்- பிரின்ஸ் படம் பார்த்த கூல் சுரேஷ் கொடுத்த விமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


அனுதீப் கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் நடிப்பில் காமெடி கலந்த காதல் படமாக வெளியாகி உள்ள திரைப்படம் தான் பிரின்ஸ். இந்தத் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்றைய தினம் வெளியாகி லவையான விமர்சனங்கள் குவிந்து வந்தாலும், ஜாலியாக சினிமாவை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

அத்தோடு இன்றைய தினம் சர்தார் திரைப்படமும் வெளியாகியிருப்பதால் இவ் இரண்டு படங்களில் எந்தப் படம் கலெக்ஷனில் அள்ளிக் குவிக்கும் என்ற விபரம் நாளைய தினம் வெளியாகும்.பொதுவாக முன்னணி நடிகர்களி படங்களை தியேட்டரில் பார்த்து விட்டு விமர்சனம்  செய்பவர் தான் கூல் சுரேஷ்.


இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை பார்த்து விட்டு பேசிய பேச்சு டிரெண்டாகி வருகிறது.தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் வசூல் மன்னன் என மதுரை அன்புச்செழியன் பிரின்ஸ் புரமொஷன் விழாவில் பேசியிருந்தார். இந்நிலையில், அந்த பாயிண்ட்டையே வைத்துக் கொண்டு கூல் சுரேஷ் பிரின்ஸ் படத்தின் FDFS பார்த்து விட்டு பேசியுள்ளார்.


மேலும் மச்சான் சிவகார்த்திகேயன் தாறுமாறா நடிச்சிருக்கான்.. பிரின்ஸ் படத்தை கண்டிப்பா தீபாவளிக்கு குடும்பத்தோட பார்த்து கொண்டாடுங்க என கூல் சுரேஷ் பேசி உள்ளார். இவரின் இந்த வீடியோ வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement